Wednesday, November 10, 2010

கரை மேல் பிறக்க வைத்தான்

ஏறத்தாழ ஆயிரம் கிலோ மீட்டர் தொலவு கொண்ட கடலோர பரப்பக் கொண்ட தமிழ்நாடு. இதனால்தான் நம மாநிலத்தின் இரண்டாவ மிகப்பெரிய தொழிலாகவும், நாட்டின் 3 வ மீன்பிடி மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிற. தலநகர் சென்ன வங்கி தென்முன குமரி வர சுமார் ஒருகோடி பேர் நேரடியாகவும், மறமுகமாகவும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உடலுக்கு தேவயான புரதச் சத்த அபரிமிதமாக அளிக்கும் மீன், தமிழர்களின் பாரம்பரிய உணவு மட்டுமல்ல சத்தானம் கூட. இவ்வளவு சிறப்பு மிக்க இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கத் தரம் எப்படி இருக்கிற என்றால், அ கேட்பதற்கு அவ்வளவு உவப்பு தரக்கூடிய அல்ல. அவர்கள் சார்ந்ள்ள இடம்போன்றே உவர்ப்ப தரக்கூடிய. கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிற என்றால், அ மீனவர்களின் கண்ணீரால் தான் என்ற சொற்றொடர் நம தமிழக மீனவர்களுக்கு மிகச்சரியாக பொருந்ம்.
இயற்க பேரிடர், எரிபொருள் செலவு, மீன் பற்றாக்குற என பல்வேறு வகயிலும் ஏற்கனவே யர் நிறந்த வாழ்க்கய சந்தித் வரும் மீனவர்களுக்கு மற்றுமொரு பேரிடியாக வர உள்ளதான் கடல் மீன் தொழில் ஒழுங்கமப்பு மற்றும் மேலாண்ம சட்டம் 2009. நம கடல்பரப்பில் அந்நிய நாட்டவர் நுழவத தடுக்க கண்காணிப்பு சட்டங்கள் கொண்டு வந்தால் அ வரவேற்க தக்க, அதற்கு மாறாக நம கடல்பரப்பில் நம மீனவர்கள் மீன்பிடிப்பத வரமுற செய்வதற்கு ஒரு சட்டம் தேவயா. சொந்த நாட்டு மக்கள பயங்கரவாதிகள் போல் சித்திரிப்பதற்கு மத்திய அரசு எடுத்க் கொள்ளும் கடும் முயற்சிகள் வேதனயத் தான் வரவழக்கின்றன. யார திருப்திபடுத்த இத்தகய சட்டங்கள அடித்தட்டு மக்கள் மீ திணிக்க இந்த அரசு இவ்வளவு முயற்சி எடுக்கிற. தாய்நாட்டு மக்கள தவிக்க வக்க ஒரு சட்டம் கொண்டுவரப்பட உள்ள நிலயில், அதன் பாதகமான அம்சங்கள் குறித் இங்குள்ள அரசியல் கட்சிகள் ஒருவார்த்த கூட பேசாமல் வாய்முடி மௌனசாமியாக காட்சி தருகின்றன.
கடல் மீன்தொழில் ஒழுங்கமுற மற்றும் மேலாண்ம சட்டம் என்றால் என்ன. அதன் விளவுகள் என்ன என்ற கேள்வி மீன்தொழிலச் சாராதவர்களுக்கு எழக்கூடும். 12 கடல்மல் தொலவு ( ஒரு கடல் மல் = 1.08 கிலோ மீட்டர் ) தாண்டி மீன்பிடிக்கச் செல்லக் கூடா, எந்தவக மீன்பிடி கலனாக இருந்தாலும், மத்திய அரசிடம் கட்டணம் செலுத்தி தன்ன பதிவு செய் கொள்ள வேண்டும், அவ்வாறு அனுமதி பெறும்போ, பிடிக்கப்போகும் மீன் இனங்கள், எந்த இடத்தில் எத்தன மாதங்கள் தங்கி மீன்பிடிக்கப்படும், எந்த முறயில் மீன்பிடிப்பு நடபெறும் போன்ற விவரங்கள் முன்கூட்டியே அரசுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் வேண்டும் என்று இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள. பிடிக்கப்படும் மீன்கள் தனிநபர் பயன்பாட்டுக்கா, வணிகத்திற்கா, ஆய்வுக்கா என்றும் முன்கூட்டியே தெரிவிப்படன், இத்தகய அனுமதிய குறிப்பிட்ட கால இடவெளியில் புப்பித்க் கொண்டிருக்க வேண்டும் என்றும் மீனவர்கள் மீ கிடுக்குப்பிடி போடுகிற அரசு. குறிப்பிட்ட சிலவக மீன்கள பிடிக்கக் கூடா என கட்டுப்பாடு விதிக்கவும் இச்சட்டத்தில் இடம் உண்டு. இமட்டுமல்ல நாட்டின் பாகாப்பு காரணத்தக் காட்டியோ, அல்ல அரசு தீட்டும் கடல் மீன்வளம் சார்ந்த திட்டத்தக் காட்டியோ மீனவர்களுக்குத் தரப்படும் அனுமதிகளயும், சலுககளயும் ரத் செய்யும் அதிகாரம் அரசின் வசம் உள்ள என்ப தான் இச்சட்டத்தில் உள்ள ஆகப்பெரிய கொடும.
மேலே குறிப்பிடப்பட்டள்ளவ இச்சட்டத்தில் உள்ள விதிகள். இவற்ற மீறினால் என்ன தண்டனகள் என்பம் இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள. அதாவ 12 கடல் மல் எல்லய தாண்டினால் 9 லட்ச ருபாய் அபராதம். படகின் சொந்தக்காரருக்கு 3 ஆண்டு சிறத் தண்டன. மீன்களும் பறிமுதல் செய்யப்படும். படகின் நீளம் 12 மீட்டருக்கு மேல் இருந்தாலும் தண்டன உண்டு. படகில் பத்தாயிரம் ருபாய்க்கு மேல் மீன்கள் இருக்குமானாலும் அந்த படகு பறிமுதல் செய்யப்படும். படக விடுவிக்க வேண்டுமானால் படகின் மதிப்பில் பாதிய பிணத்தொகயாக கட்ட வேண்டும். அப்படகில் இருந்த அனத் தொழிலாளர்களுக்கும் 25 ஆயிரம் ருபாய் அபராதம் விதிக்கப்படும். மீனவர்கள க செய்தல், படகு மற்றும் மீன்பிடிக் கருவிகள பறித்தல் போன்றவற்றிற்கு மீனவர்கள் இழப்பீடும் கோரமுடியா என்ப தண்டனயின் கோரமுகம். சந்தேகத்தின் பேரில் தவறான நபர்கள பிடித்தாலும், கடலோர காவல்படயினர் மீ வழக்குப் போடமுடியா என்பம் இந்த விதியின் சிறப்பம்சம். மொத்தத்தில் மீனவர்கள கடலில் தள்ளி அழிக்க நினப்பத தவிர இச்சட்டம் சாதிக்கக் கூடிய வேறொன்றும் இல்ல.
நாட்டுப்படகு, விசப்படகு, சிறிய கப்பல், கப்பல் என நான்கு நிலகளில் மீன்பிடி கலன்கள் உள்ளன. இந்த அடிப்பட வேறுபாடு கூட தெரியாமல் அனத்தயும் ஒரே தட்டில் வத் மீன்பிடி கலன்கள் அனுமதி பெற வேண்டும் என்று ஒரே விதிய மீனவர் தலயில் விதித்ள்ள இந்த கடலோர மீன்பிடித்தொழில் சட்டம். சாதாரண நாட்டுப்படகில் சென்று மீன்பிடிக்கும் ஒரு மீனவனும், கப்பலில் சென்று மீன்பிடிக்கும் கப்பல்களும் ஒரே மாதிரியான விதிமுறயின் கீழ் கொண்டுவரப்படுவ எந்தவிதத்தில் நியாயம் என்ப புரியவில்ல. அடுத் கரயோரப் பகுதிகளில் மீன்வளம் குறந் வருவதால் 12 கடல் மல்களத் தாண்டி மீன்பிடிக்க செல்லாவிட்டால் பிழக்கவே முடியா- என்பதான் இன்றய நிலம. விசப்படகில் நெடுந்தொலவு பயணித், பல மாதங்கள் முகாமிட்டால் மட்டுமே போமான மீன்கள் கிடக்கும் என்ப தான் யதார்த்தம். ஒருமுற கடலுக்கு சென்று வரும் செலவு மட்டுமே ஒன்றர லட்சருபாய் என்றுள்ள நிலயில், இத்தகய கட்டுப்பாடுகள் மீன்பிடித் தொழிலுக்கு அடித்ள்ள சாவுமணியாகும்.
விசப்படகுகளுக்கு சராசரியாக ஒருநாள் பயணத்க்கு 240 லிட்டர் டீசல் தேவப்படும். 100 கடல்மல் தொலவுக்கு சென்று மீன்பிடிக்கும் விசப்படகுக்கு போக, வர சுமார் 2 ஆயிரம் லிட்டர் டீசல் தேவப்படும். படகில் இருக்கும் தொழிலாளிக்கு உணவு, பேட்டா, மீனப் பத்திரப்படுத்த ஐஸ் கட்டிகள், ரேஷன் பொருட்கள், இத்யாதி என்று ஒரு மீன்பிடி பயணத்க்கு ஒன்றர லட்ச ருபாய் ஆகலாம். விசப்படகு மீனவர்களுக்கு ஒரு லிட்டருக்கு ஒரு ருபாய்தான் டீசல் மானியம். ஆனால், பரந் விரிந்ள்ள கடல்பரப்பில் எங்கும் நங்கூரம் பாய்ச்சி கணக்கில் அடங்காத மீன்கள பிடித் கரக்கு திரும்பாமல், கப்பலில் இருந்தபடியே ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு கப்பல் நிறுவனங்களச் சேர்ந்த கப்பல்களுக்கு உற்பத்தி விலயில் அதாவ ஒரு லிட்டர் டீசல் வெறும் 16 ருபாய் என்ற விலயில் மத்திய அரசு டீசல வழங்குகிற. என்ன ஒரு கொடும. பாடுபட்டு உழத், அரவயிற்று கஞ்சிக்கு அல்லல்படும் மீனவ தொழிலாளி டீசல் வாங்க சென்றால் ஒ-ரு ருபாய் தான் மானியம், ஒய்யாரமாய் நடுக்கடலில் வலவிரித் அப்படியே ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு உற்பத்தி விலயில் டீசல்.
டீசலில் இந்தகொடும என்றால், மண்ணெண்ணெய எரிபொருளாக பயன்படுத்ம் விசப்படகுகள் படும் பாடுகள் சொல்லி மாளா. மண்ணெண்ணெய பயன்படுத்ம் மீனவர்கள தீவிரவாதிகள் போலவும், கடத்தல்காரர்கள் போலவும் பார்க்கிற காவல்ற. ஒரு லிட்டர் மண்ணெண்ய 50 ருபாய் கொடுத் வாங்கி படகிற்கு எடுத்ச் செல்லும் போ, செக் போஸ்டுகளில் நிற்கும் காவலர்கள் லிட்டர் ஒன்றுக்கு 3 ருபாய் லஞ்சம் பெற்றுக் கொள்கின்றனர். ஏற்கனவே மீனவர்களின் வாழ்விடங்கள் உல்லாச விடுதிகள் கட்டுவதற்கென கரயோரங்களில் இருந் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. உலக மயமாக்கத்தினால் அதிகரிக்கும் கப்பல் போக்குவரத், நகரங்களில் இருந் கடலில் கொட்டப்படும் நச்சுக் கழிவுகள், அனல்மின்நிலய சாம்பல்கள் போன்றவயால் மீன்வளம் அழிந் வரும் நிலயில், மீனவர்கள் மேல் இன்னுமோர் இடியாக இச்சட்டம் வர உள்ள மற்றொரு பேரிடி.
இச்சட்டத்த கொண்டு வர அரசு கூறும் காரணம் என்னவென்று கேட்டால், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளுக்கு மீன்களயும், மீன்சார்ந்த பொருட்களயும் ஏற்றுமதி செய்வதென்றால், இந்தியாவில் அதற்கான ஒழுங்குப்படுத்ம் ஆணயம் இருக்க வேண்டும் என்று அந்த நாடுகள் எதிர்பார்க்கின்றன என்று ஏற்றுக் கொள்ள முடியாத விளக்கத்த தருகிற மத்திய அரசு. அண்ட நாட்டுக்காரன் வசதிக்காக சொந்த நாட்டு மீனவர்கள் மீ போர் தொடுப்பதா. கடல்வழியாக பாகிஸ்தானில் இருந் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் போன்று மீண்டும் ஒரு அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கவும், நம கடல் பரப்ப நிர்ணயிக்கவும் அதில் நம மேலாதிக்கத்த நிலநாட்டவும் இச்சட்டம் அவசியம் என்று மத்திய வேளாண்மத்ற அமச்சர் சரத்பவார் கருத் கூறியுள்ளார். இச்சட்டம் கொண்டு வந்தான் இந்திய கடல் எல்லயில் அமதி நிலவ வேண்டும் என்றால், அப்புறம் இந்திய கப்பற்படயும், கடலோர காவல்படயும், நுற்றுக்கணக்கான கடலோர காவல் நிலயங்கும் எதற்கு என்ற கேள்வி எழாமல் இல்ல.
ஏறத்தாழ தமிழ்நாட்டின் நிலப்பரப்பே கொண்ட இலங்க தன்னுடய நாட்டச் சேர்ந்த மீனவர்கள ( சிங்களவர்கள மட்டும் ) பாகாக்க என்னென்ன வழிவககள கயாள்கிற என்று தெரியுமா. இலங்க கடல் எல்லயில் இருந் சுமார் 800 முதல் 900 கடல் மல் தொலவு சென்று அவர்கள் மீன்பிடிக்கிறார்கள். அவ்வாறு நடுக்கடலுக்கு செல்லும் போ எளிதில் நங்கூரம் பாய்ச்ச முடியா. இதற்காக அரசின் சார்பில் கடல் பாராசூட் கருவி மீனவர்களுக்கு இலவசமாக தரப்படுகிற. இதனால் அதிக மீன்வளம் நிறந்த நடுக்கடலில் அதிக மீன்கள அறுவட செய்கின்றனர் இலங்க மீனவர்கள். அதேபோன்று வெகுதொலவில் இருந்தாலும், அவர்கள நாட்டுடன் எளிதில் பேசும் வகயில் திறன்பெற்ற ஆர்டிஎம் என்ற தொலத்தொடர்பு கருவிய இலங்க மீனவர்கள் பயன்படுத்கின்றனர். இபோன்ற கடல் பாராசூட்டோ, ஆர்டிஎம் கருவியோ தமிழக மீனவர்களிடம் இல்ல. நம்மிடம் உள்ள வயர்லெஸ் கருவியக் கொண்டு 20 கடல் மல் தொலவுக்குள் இருக்கும் படகுகளுடன் மட்டுமே பேச முடியும்.
அண்ட மாநிலமான கேரளாவின் கடற்கரயின் நீளம் 596 கிலோ மீட்டர்தான். ஆனால் அங்கு 90 ண்டில் வளவுகள் உள்ளன. தேவக்கு ஏற்றவாறு சிறுசிறு மீன்பிடித்றமுகங்கள ஆங்காங்கே அரசே அமத்க் கொடுத்ள்ள. தமிழக மீனவர்கள அங்கு தங்கி மீன்பிடிக்கவும் கேரள அரசு அனுமதிக்கிற. தமிழகத்தச் சேர்ந்த ஏறத்தாழ 600 விசப்படகுகள் கேரளாவில் தங்கி மீன்பிடித் அங்கேயே விற்பன செய்கின்றன. இதனால் கேரளாவுக்குத் தான் பொருளாதார லாபம். இதே அளவு ண்டில் வளவுகளும், சிறு றமுகங்களும் தமிழ்நாட்டில் இருந்தால், தமிழக மீனவன் எதற்காக கேரளா பக்கம் செல்ல வேண்டும். 1983 ல் நிறுவப்பட்ட சின்னமுட்டம் றமுகம் உள்பட 12 றமுகங்களே தமிழ்நாட்டில் உள்ளன. இருக்கின்ற றமுகங்களில் அதிகாரிகளின் கெடுபிடிகளும் சொல்லி மாளா.இன்றய சூழ்நிலயில் தமிழ்நாட்டின் மீன்வள அடிப்பட கட்டமப்ப புனரமக்க வேண்டிய மிக அவசியமான ஒன்று.
இருக்கின்றன பிரச்சனகளோடு மீனவர்கள் மல்லுக்கட்டி வரும் நிலயில் பூதம் போல் முளத்ள்ள கடல்மீன்பிடி ஒழுங்குமுற சட்டம், நடமுறக்கு வந்தால் இந்திய மீனவர்கள கடலில் தள்ளுவத விட வேறு எவும் செய்ய முடியா-. விஷச்செடி வளர்ந்த பின் வெட்டுவத விட, விதப்பதற்கு முன் தடுப்பதே சிறந்த. இப்போதே இச்சட்டத்த தடுத் நிறுத்தாவிட்டால், நம இந்திய கடல்பரப்பு நம்முடயதாக இருக்கா. எப்படி இலங்க கடற்படயிடம் தமிழக மீனவர்கள் நாள்தோறும் அல்லல்பட்டு மீன்பிடிக்க வேண்டி உள்ளதோ, அதேபோன்று இந்திய கடல் பகுதி முழுமயும் வல்லாதிக்க நிறுவனங்களின் கப்பல்கள் நிற்கும் தளமாக மாறிவிடும். பாரம்பரிய இந்திய மீனவன் கரயில் நின்று ண்டில் மட்டும் போட வேண்டியதான்.

Wednesday, November 19, 2008

வாரணம் ஆயிரம்

அன்புக்குரிய அப்பாவின் அந்திம செய்தி கேட்டு அவரை பற்றிய நினைவுகளை அசைபோடும் மகனின் கதைதான் வாரணம் ஆயிரம்.தந்தை மகன் என இருவேடங்களில் சூர்யா. தந்தை வேடத்தில் வரும் சூர்யா, சிம்ரனை துரத்தி துரத்தி காதலித்து கரம் பிடிக்கிறார். தன்வாழ்நாள் இறுதிவரை மனைவியை மிகவும் தீவிரமாக காதலித்தவண்ணம் உள்ளார். மகன் சூர்யா, தந்தை வழியில் கல்லூரி மாணவி ஷமீரா ரெட்டியை காதலிக்கிறார். இதற்காக அவரை அமெரிக்காவரை பின்தொடர்ந்து செல்கிறார். ஆனால் அரும்பிய காதல் மலர்வதற்குள் ஷமீரா வெடிகுண்டுக்கு இரையாகிறார். காதலியின் பிரிவு துயர் தாங்காத சூர்யா, போதையின் பாதையில் பயணமாகிறார். பிறகு தன்தவறை உணர்ந்து மறுபிறவி எடுத்தது போல் ராணுவ மேஜராக பணியில் அமர்கிறார். தீவிரவாதிகளை வேட்டையாட ஹெலிகாப்டரில் பறந்து செல்கிறார் சூர்யா. அப்போது தந்தை மரணமடைந்ததாக தகவல் கிடைக்கிறது. தன்வாழ்நாளெல்லாம் ஒரு வழிகாட்டியாய், நண்பனாய் உடன் வந்த தந்தையை பற்றிய தருணங்களை நினைவுகூர்கிறார் சூர்யா. காற்றில் கலந்துவிட்ட போதும், கேசங்கள் கலையும் போதெல்லாம் அவர் விரல்கள் கோதுவதாகவே கருதியபடி மகன்சூர்யா நடைபோடுவதோடு படம் நிறைவடைகிறது. 1970 காலகட்டத்து இளைஞனாகவும், 1990கள் காலகட்டத்து இளைஞனாகவும் இருவேறு பாத்திரப்படைப்புகளில் தன்னை வித்தியாசம் காட்டி புருவம் உயர்த்த செய்துள்ளார் சூர்யா. அதே போன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியவராக பேச முடியாமல் நா குழறியபடி தடுமாறும் போது அவரது நடிப்பிற்கு தாராளமாக ஒரு சல்யூட் வைக்கலாம்.பதின்ம வயது துறுதுறு இளைஞனாக வரும் அதே சூர்யா, தடந்தோள் உயர்த்தி மலையென தோற்றமளிக்கும் ஆஜானுபாகுவான உடலுடனும் அசத்துகிறார். சிறந்த துணை நடிகைக்கான விருதை தாராளமாக சிம்ரனுக்கு தரலாம். உணவருந்தியபடியே அவர் பேசும் காட்சி சமீபத்திய படங்களில் இத்தனை சிறந்த முகபாவம் எதிலும் வந்ததில்லை என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. அழகு பதுமையாக வரும் ஷமீரா ரெட்டி அநியாயமாக இறந்து போகிறார். படத்தின் பெரும் பலம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கிடார் இசைக் கருவியை இளையராஜா அளவுக்கு இதுவரை யாரும் கையாண்டதில்லை என்று கூறுவார்கள். அதனை இந்த படத்தில் தாண்டியுள்ளார் ஹாரிஸ். படம் முழுவதும் இசைதாண்டவமே ஆடியிருக்கிறார். நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, முன்தினம் பார்த்தேன், அடியே கொல்லுதே போன்ற பாடல்கள் நம்மை வேறொரு தளத்திற்கு அழைத்து செல்கிறது. அதே போன்று ரத்னவேலுவின் ஒளிப்பதிவு உலகத்தரம். ஆனால் இத்தனை நல்ல அம்சங்களையும் தனது திரைக்கதையால் போட்டு குழப்பி எடுத்துள்ளார் இயக்குனர் கௌதம் மேனன். தனது தந்தைக்கு சமர்ப்பணம் என்ற உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இந்த படத்தை எடுத்துள்ளதால் கோர்வையாக அவரால் காட்சிகளை கொண்டுவர முடியவில்லை. இதனால் இரண்டாவது பாதி நம்மை ஆழ்ந்த உறக்கத்திற்கு இட்டு செல்கிறது.இந்த குறையை நிவர்த்தி செய்திருந்தால் வாரணம் ஆயிரம், தாராளமாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை அள்ளியிருக்கும். அரவிந்த் குமார்

சோம்பேறி

இந்த சோம்பேறிதனத்தால எவ்ளோ வேலைகள் வீணாக போகுது. தினமும் எதாவது எழுதனும் என்று நினைக்கிறேன். ஆனா முடியாம போகுது.மனசில் யோசிச்சு வச்சு இருக்குற விஷயங்கள் ஏராளம்.அதை எழுதினாலே நிச்சயம் யார் இவர் என்று அனைவரும் யோசிப்பார்கள். ஆனால் இந்த சோம்பேறிதனத்தால் தள்ளி கொண்டே போகிறது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

Friday, November 7, 2008

உண்மை

வந்திங்கு பார்த்த பின்னர் புறஞ்
சென்றங்கு பொய் பேசுவர் தமை
கொன்றிங்கு போட்டால் தான் மெய்
வென்றிங்கு வாழும்.


பொய்நீக்கி மெய் பேசும் பண்புடையார் - தலை
கொய்வேனென்று ரைத்தாலும் உயிருக்கஞ்சி
தொய்வான முகத்தோடு வேறுமொழி பேசுவாரோ
பொய்பேசி உயிர்வாழின் அவ்வுயிர் வேண்டாம்மென்று அறியாரோ

யார் தமிழன் ?

வேல்பிடித்து போர்புரிந்த காலம் தொட்டே
கொள்கை பிடிப்பாய் சுற்றி வந்த கூட்டம் -இன்று
வால்பிடித்து வாழ்வதென்ன அவலம் - ஒரு
கோல் ஊன்றி வாழ்ந்தாலும் வாழலாம் - ஒரு
கொள்கையின்றி வாழ்வதுவும் வாழ்வா?.

எங்கடா வீழ்ந்தாய் தமிழா - நீ
ஏனடா சோர்ந்தாய் தமிழா - தமிழன்
மானத்திற்க்காய் மாண்டதை வரலாறு சொல்லும்
இன்றோ மாயைகளின் பிடியில் மாள்வதை
வரலாறு என்னவென்று கொள்ளும்.

ஆறாத ரணமாய் வலிக்குதடா தம்பி - இந்த
ஆரிய நாய்களை அடித்துவிடு எம்பி
ஆறப்போட்டு போருத்ததெல்லாம் போரும் - உன்
ஆற்றலையெல்லாம் இதுதான் கொண்டுவரும் நேரம்
உற்றத்துனை தமிழுண்டு ஆர்த்தெழுவாய் சிங்கமே

இன்னும் என்ன தயக்கம் - எதை
எண்ணி இந்த மயக்கம் - தொலைத்த
தமிழினத்தை தேடும் படலம் இது - இதை
தடுப்பவர் எவரையும் தொலைக்கும் படலம் இது
சடலமா நீ? சினங்கொள், சீறி எழு

தமிழர் தந்த பிள்ளைகள் நாம் - பிற
ஆரியர் ஆள்வதை பொறுப்பது தவறு
கூரிய முனை கொண்டு உன்னை குத்தி கொன்றாலும்
சீரிய சிந்தனை கொண்டு தமிழன்
உலகுக்கு சொல்லடா.

Tuesday, November 4, 2008

நேரம்

இந்த நேரத்தை எப்படி சரியாக கையாள்வது என்பது இன்று வரை கைவராத கலையாகவே இருக்கிறது. பத்து மணிக்கு ஒருவரை சந்திக்கிறேன் என்று சொன்னால் நிச்சயமாக பதினொன்று மணிக்கு தான் அந்த விசயமே நினைவுக்கு வருகிறது. இத்தனை ஆண்டுகளில் பல நல்ல விஷயங்கள் இந்த நேரம் என்ற விஷயத்தாலேயே கை நழுவி போயுள்ளது. இன்று கூடஒரே சமயத்தில் மூன்று பேரை சந்திப்பதாக கூறிவிட்டு ஒருவரையும் சந்திக்காமல் வீட்டுக்கு செல்லவேண்டிய சூழல். என்ன செய்வது.?

Monday, November 3, 2008

காலத்தை வென்றவன் நீ


சாதாரண கவுன்சிலர் பதவிக்கே சட்டைய கிழித்து கொண்டு சண்டையை போடும் இந்தகாலத்தில் போட்டியிட்டால் முதல்வர் பதவி நிச்சயம் என்ற நிலையிலும் கூட அரசியல் வேண்டாம் என்ற திடமான முடிவை எடுத்த ரஜினியை பாராட்டாமல் இருக்க முடியாது. கோழை, சுயநலவாதி இப்படி பல பட்ட பெயர்கள் மாற்று ரசிகர்களால் அவருக்கு சூட்டப் பட்டாலும் இன்று அவரது முடிவு பல அரசியல்வாதிகளின் வயிற்றில் பாலை வாற்றி இருக்கிறது என்றால் அது மிகையல்ல . தெரியாத ஒன்றை செய்ய மாட்டேன் என்று சொல்லும் தைரியம் நம்மில் எத்தனை பேருக்கு வரும்.? நாற்காலி கனவுகளில் மிதக்கும் அரசியல் நடிகர்களுக்கு மத்தியில் ரஜினியின் முடிவு துணிச்சலான ஒன்று. காலம் கட்டாயம் இதனை வரலாற்றில் பதிவு செய்யும்.